சிறுநீரக கற்கள் பிரச்சனையை நீக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
சிறுநீரக கல் பிரச்சனை பொதுவாக அனைவருக்கும் வருவது வழக்கமாகிவிட்டது. அதற்கு முக்கிய காரணம் உணவு பழக்கம். நாம் உணவில் ஆரோக்கியம் மற்ற உணவுகளை சாப்பிடுவதன் மூலமாக பெருமளவில் இந்தப் பிரச்சனை வரக்கூடும்.
முதலில் சிறுநீரக கற்கள் இருந்தால் நாம் இப்படித்தான் சாப்பிட வேண்டும்.
சிறுநீரகக் கல் பிரச்சனை உள்ளவர்கள் ஒரு நாளைக்கு 8 டம்ளர் தண்ணீரை குடிக்க வேண்டும். நார்ச்சத்து உள்ள உணவுகளை அதிகமாக சாப்பிடுவதன் மூலம் சிறுநீரக கல் வளராமல் பார்த்துக் கொள்ள முடியும்.
பழ வகைகளில் ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை பழத்தை உணவில் சேர்த்துக் கொள்வது சிறந்தது. மேலும் தேங்காய் நீர் மிகவும் நல்லது.
மேலும் பாகற்காய் வெண்டைக்காய் பட்டாணி ஆப்பிள் கீரை போன்ற உணவுகளை கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.
என்னென்ன பொருட்களை நாம் உணவில் எடுத்துக் கொள்ளக்கூடாது என பார்க்கலாம்.
முட்டை மீன் இறைச்சி போன்ற உணவுகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். மேலும் பாலில் உருவாகும் வெண்ணை தயிர் மோர் போன்ற பொருட்களை குறைவாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.
முள்ளங்கி கேரட் பூண்டு வெங்காயம் போன்ற காய்கறிகளை உணவில் சேர்ப்பதை குறைத்துக் கொண்டால் சிறுநீரக கல் பிரச்சனையை குறைக்க உதவும்.