What became of the ‘Indian 2’ problem - Kamal broke the silence
கமல் – ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘இந்தியன் 2’. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. கடந்த ஆண்டு படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விபத்து ஏற்பட்ட போது நிறுத்தப்பட்ட, இப்படத்தின் படப்பிடிப்பு அதன்பின் தொடங்கப்படவில்லை. மேலும் தயாரிப்பு தரப்புடன் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்தியன் 2 படத்தை கிடப்பில் போட்ட இயக்குனர் ஷங்கர், தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து புதிய படம் இயக்க தயாராகி வந்தார்.
இதனிடையே, இந்தியன் 2 படத்தை முடிக்காமல் வேறு படத்தை ஷங்கர் இயக்க தடை விதிக்க கோரி ஐகோர்ட்டில் லைகா நிறுவனம் மேல்முறையீடு செய்திருந்தது. இதனை விசாரித்த தனி நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்த நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த விவகாரம் குறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வந்த கமல்ஹாசன், சமீபத்திய பேட்டியில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், “‘இந்தியன் 2’ படத்தின் 60 சதவீத காட்சிகள் முடிவடைந்துள்ளது. இப்படத்தை சுற்றியுள்ள பிரச்சனைகள் கூடிய விரைவில் முடிக்கப்பட்டுவிடும். விக்ரம் படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் ‘இந்தியன் 2’ பட பணிகள் ஆரம்பிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
வெண்ணிலவே வெண்ணிலவே பாடலுக்கு வாசித்த போது அழுதுவிட்டேன் என கூறியுள்ளார் ஏ ஆர் ரகுமான். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக பல…
வித் லவ் படத்தை பாராட்டிய பகவந்த் கேசரி இயக்குநர் அனில் ரவிபுடி துமுகம் மதன் இயக்கத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி பட…
‘வலை’யில் 2 வேடங்களில் நடிக்கும் அதர்வா முரளி..கதை என்ன தெரியுமா? அதர்வா முரளி இரட்டை வேடங்களில் நடிக்கும் படத்துக்கு ‘வலை’…
'பூக்கி" படத்தில் முதல்முறையாக... மனம்திறந்து பேசிய விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி நடிகராகவும் வலம் வருபவர் விஜய்…
3 ஆண்டுகளாக தொல்லை தரும் நபர்கள்: நடிகை ரவீணா ரவி வேதனை பதிவு தமிழ் சினிமாவில் பிரபல டப்பிங் கலைஞர்…
சினிமாவில் இருந்து விலகியது ஏன்? - முமைத் கான் விளக்கம் தமிழ் சினிமாவில் போக்கிரி, வில்லு, கந்தசாமி உள்பட பல…