இயற்கையாகவே முகத்தை பொலிவுடன் வைக்க என்ன செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க.
பொதுவாக நம் முகத்தை பெரும்பாலும் க்ரீம் மேற்கொண்டு பொலிவு பெறச் செய்வது குறிப்பிடத்தக்கது. ஆனால் நம் இயற்கையாகவே அதைப் பின்பற்றலாம்.
இயற்கையாக முகத்தை பொலிவுடன் வைப்பது சரும பிரச்சனைகளில் இருந்தும் தவிர்க்கலாம்.
முதலில் எலுமிச்சை பழத்தை ஒரு தேக்கரண்டி சாறு எடுத்து அதில் சம அளவு தயிரை கலந்து முகம் முழுவதும் பூச வேண்டும். 15லிருந்து 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவினால் முகம் பொலிவாக தெரியும் மேலும் எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் சி முகப் பொலிவிற்கு பெரிதும் உதவுகிறது.
கற்றாழையை ஒரு தேக்கரண்டித் தூளுடன் தேன் கலந்து முகத்தில் முழுவதும் தடவி20 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால் பளபளப்பாகத் தெரியும்.
மேலும் குப்பைமேனி இலை சாறு கஸ்தூரி மஞ்சள் எலுமிச்சைச் சாறு பன்னீர் கற்றாழை சாறு சேர்த்து நன்கு கலந்து முகத்தில் தடவ வேண்டும். பிறகு 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவினால் சருமம் மென்மையாக இருப்பதை உணரலாம்.
இப்படியான முறைகளில் முகத்தை பொலிவுடன் செய்வதற்கு இயற்கையான முறையில் நாம் கையாளுவதன் மூலம் சருமத்திற்கு எந்த பிரச்சனையும் வருவதை தடுக்கலாம்.