warning-issued-by-surya-42 movie production
இந்திய திரை உலகில் மாஸ் ஹீரோவாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் சூர்யா. இவர் தற்பொழுது வணங்கான், வாடிவாசல் போன்ற படங்களில் தீவிரமாக நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படங்களைத் தொடர்ந்து சூர்யா இயக்குனர் சிறுத்தை சிவா இயக்க இருக்கும் “சூர்யா 42” என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். தற்பொழுது சூர்யா 42 என்று தற்காலிகமாக பெயர் வைத்துள்ள இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் சேர்ந்து தயாரிக்க உள்ளது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி ஹீரோயினாக நடிக்க, ஆனந்த்ராஜ், கோவை சரளா, கிங்ஸ்லி, யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில் சூர்யா 42 திரைப்படம் 10 மொழிகளில் 3d இல் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து இப்படத்திற்கான மிரட்டலான மோஷன் போஸ்டரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டு இருந்தது. அப்போஸ்டர் இணையத்தில் பயங்கரமாக வைரலாகி ரசிகர்களின் மதில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து சூர்யா மற்றும் இயக்குனர் சிறுத்தை சிவா ஆகியோர் ஒன்றாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் லீக் ஆனது. அதனால் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் படப்பிடிப்பு தளத்தில் உள்ள போட்டோ, வீடியோக்களை வெளியிடுபவர்கள் மற்றும் அதை ஷேர் செய்பவர்கள் மீது காப்புரிமை வழக்கு தொடரப்படும் என்று எச்சரிக்கை விடுத்து நோட்டீசை வெளியிட்டுள்ளது. அது தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி,…
மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் மேலாளர் திஷா சலியன் மரண வழக்கில், மத்திய குற்றப்புலனாய்வுத் துறை…
நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் வெளியான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் மலையாள திரையுலகில் அதிக வசூல் செய்த…
‘இருமுகன்’ படத்தின் வெற்றிக் கூட்டணியான நடிகர் விக்ரம் மற்றும் இயக்குநர் ஆனந்த் சங்கர் மீண்டும் இணைந்துள்ள புதிய திரைப்படத்திற்கு ‘பவர்ஹவுஸ்’…
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘சீன்’ திரைப்படத்தின் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சூர்யாவின்…
Mookuthi Amman 2 Maha Sakthi Teaser (Tamil) | Nayanthara | Sundar C | Hiphop Tamizha…