உடல் எடையை குறைக்க உதவும் நீர்.
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உடல் பருமனால் பாதிக்கப்பட்டு உடற்பயிற்சி செய்வது வழக்கம். ஆனால் உணவிலும் கட்டுப்பாட்டுடன் இருப்பார்கள். அப்படி உடல் எடையை குறைக்கும் இஞ்சி கிராம்பு தண்ணீரை தயாரிக்கும் முறையை குறித்து பார்க்கலாம்.
முதலில் இஞ்சி மற்றும் எலுமிச்சை பழத்தை நன்றாக நறுக்கி ஒரு கடாயில் 12 கிராம்பு புதினா இலை நறுக்கிய இஞ்சி எலுமிச்சை பழம் சேர்த்து ஒரு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து பிறகு வடிகட்டி குடித்து வர வேண்டும்.
இதனை இரவு உறங்க செல்வதற்கு முன் குடித்து வர வேண்டும். இதில் பாஸ்பரஸ் கால்சியம் சத்துக்கள் இருப்பதால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது.
மேலும் இது செரிமான செயல்முறையை மேம்படுத்தி வளர்ச்சி மாற்றத்தை அதிகரிக்கிறது.
இது மட்டும் இல்லாமல் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, ரத்த கட்டிகள் உருவாவதை தடுத்து இதயத்திற்கு ஆரோக்கியத்தை தருகிறது.
எனவே உடலுக்கு ஆரோக்கியம் தரும் இஞ்சி கிராம்பு தண்ணீரை குடித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

