Tamilstar
Health

உடல் எடை சட்டுனு குறைய வேண்டுமா? அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்காக..

Want to lose weight fast? So these tips are for you

உடல் எடையை குறைக்க உதவும் பானங்கள் குறித்து பார்க்கலாம்.

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உடல் பருமனால் பாதிக்கப்பட்டு பல்வேறு டயட்களும் உடற்பயிற்சிகளும் செய்து உடல் எடையை குறைத்து வருகின்றனர். மேலும் உடல் பருமன் காரணமாக உடலில் பல்வேறு நோய்களும் வரக்கூடும் குறிப்பாக இதயம் சம்பந்தப்பட்ட நோய்களும் அதிகமாக வரக்கூடும். எனவே அதிலிருந்து நாம் விடுபட உடல் எடையை குறைக்க சில பானங்களை நாம் குடிக்கலாம்.

சீரகத்தை இரவில் ஒரு பாத்திரத்தில் அரை டீஸ்பூன் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து பிறகு அந்த நீரை காலையில் இருந்து வயிற்றில் குடிக்க வேண்டும்.

இது மட்டும் இல்லாமல் ஓமம் நீரை குடிப்பதால் செரிமானப் பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு வயிற்றில் இருக்கும் கொழுப்பை கரைக்க உதவும்.

குறிப்பாக சோம்பு தண்ணீர் குடித்து வரும்போது அது வயிற்றுக்கு குளிர்ச்சியை தருவது மட்டுமில்லாமல் உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றவும் உதவுகிறது.

எனவே ஆரோக்கியம் தரும் பானங்களை குடித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.