இதய நோய் வராமல் தடுக்க சாப்பிட வேண்டிய உணவுகள்.
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களில் பாதிக்கப்படுகின்றன. அப்படி இதய நோயிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள சில உணவு வகைகளை நாம் உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. முதலில் சாப்பிட வேண்டியது ஸ்ட்ராபெரி போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளை நாம் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் காய்கறிகளில் கீரை வகைகள் மற்றும் முட்டை கோஸ் அதிகமாக எடுத்துக் கொண்டால் அது ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி இதயத்திற்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது.
குறிப்பாக ஓட்ஸ், கோதுமை, பழுப்பு அரிசி போன்றவற்றை சாப்பிடும் போது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் ரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவும்.
அசைவ உணவுகளில் கானாங்கெளுத்தி மற்றும் மத்தி மீன்களை சாப்பிடலாம்.
எனவே இதய நோயிலிருந்து வரும் அபாயத்தை உணர்ந்து ஆரோக்கியமான உணவை உணவில் சேர்த்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.