Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வெந்து தணிந்தது காடு படத்திலிருந்து வெளியான காலத்துக்கும் நீ வேணும் பாடல்.. வைரலாகும் வீடியோ..!

தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகர் சிம்பு. இவர் சமீபத்தில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியுள்ள இப்படத்தினை பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ் தயாரித்திருந்தார்.

சமீபத்தில் வெளியான இப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்ததை தொடர்ந்து தற்போது ஓடிடி தளத்திலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் சிம்புவுக்கு ஜோடியாக சித்தி இட்னானி நடிக்க ராதிகா சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தில் இடம் பெற்றிருக்கும் காலத்துக்கும் நீ வேணும் என்ற பாடலின் வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி உள்ளது. ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகி இருக்கும் இப்பாடலை தாமரை எழுத சிம்பு மற்றும் ரக்ஷிதா சுரேஷ் இணைந்து பாடியுள்ளனர்.