Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சித்ராவின் தற்கொலை குறித்து பரபரப்பு புகார்.. வெளியான ஷாக் தகவல்

Vj Chithra Husband Complaint Update

தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக சீரியல் நடிகையாகவும் வலம் வந்தவர் சித்ரா. பாண்டியன் ஸ்டோர் சீரியல் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்தார்.

இந்த நிலையில் ஹேமந்த் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இந்த நிலையில் அவரை ரகசிய திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்தார். இப்படியான சூழலில் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு காரணம் ஹேமந்த் தான் என அவரை கைது செய்தனர். பிறகு அவர் மார்ச் 2021 ஆம் ஆண்டில் ஜாமினில் வெளிவந்தார்.

இந்நிலையில் தற்போது இவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது போலீஸ் பாதுகாப்பு கேட்டு புகார் அளித்துள்ளார். தனது மனைவியின் மரணத்திற்கு நான் தான் காரணம் என என் மீது சேற்றை வாரி இவர்களுக்கு நான் குற்றமற்றவன் என நிரூபிக்க வேண்டும். அந்த ஒரே காரணத்துக்காகத்தான் தற்போது வரை உயிரோடு இருந்து வருகிறேன். இந்த நிலையில் என்னுடைய மனைவியின் தற்கொலைக்கு காரணமாக இருந்த மாபியா கும்பல் என்னைக் கொன்று விடுவேன் என மிரட்டுகிறது.

இந்த மாஃபியா கும்பலிடம் இதன் மூலம் பணம் பறிக்க முயற்சி செய்யும் இன்னொரு கும்பலும் ஒத்துழைப்பு தராவிட்டால் கொன்றுவிடுவேன் என மிரட்டுகிறது. குற்றமற்றவன் நிரூபிக்கும் வரை உயிரோடு இருக்க வேண்டும். அதற்காக தனக்கு போலீஸ் பாதுகாப்பு தேவை என புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உண்மையில் சித்ராவின் தற்கொலைக்கு யார் காரணம் என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Vj Chithra Husband Complaint Update
Vj Chithra Husband Complaint Update