தமிழ் சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளினியாக பணியாற்றியவர் தான் அர்ச்சனா. இவர் முதலில் ஜீ தொலைக்காட்சியில் முக்கியமான தொகுப்பாளினியாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். இதனைத் தொடர்ந்து இவர் விஜய் தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன்4ரில் போட்டியாளராக களம் இறங்கினார்.
அதற்குப் பின் அந்த தொலைக்காட்சியிலேயே சில ரியாலிட்டி ஷோகளை வழங்கி வந்தார் சில உடல்நிலை காரணத்தால் தற்போது ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் தொகுப்பாளினி அர்ச்சனாவின் மகள் சாரா தனது அம்மாவின் பிறந்த நாள் பரிசால் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். சாராவும் தனது அம்மாவுடன் சேர்ந்து சில நிகழ்ச்சிகளை தொகுத்துவழங்கி மக்களிடையே பிரபலமானவர் தான்.
இவர் தற்போது தனது அம்மாவான அர்ச்சனாவின் 40வது பிறந்தநாளுக்கு மோதிரத்தை பரிசாக அளித்து அர்ச்சனாவை நெகிழ்ச்சியில் கட்டி அணைத்து அழ வைத்துள்ளார். இந்த வீடியோவை அர்ச்சனா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட நிலையில் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
View this post on Instagram