vishnu-vishal-post-goes-viral
வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவரான விஷ்ணு விஷால் ‘வெண்ணிலா கபடி குழு’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். 2018-ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான சைக்காலஜி த்ரில்லரான ராட்சசன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து பல தடைகளை தாண்டி வெளியான இவரது எஃப் ஐ ஆர் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.விஷ்ணு விஷால்- செல்லா அய்யாவுதொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்த விஷ்ணு விஷால் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ‘லால் சலாம்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இப்படம் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து, சமீபத்தில் விஷ்ணு விஷால், இயக்குனர் செல்லா அய்யாவு படத்தில் நடிக்கவுள்ளதாகவும் இந்த படத்தை விஷ்ணு விஷாலே தயாரிக்கவுள்ளதாகவும் அறிவித்திருந்தார்.இந்நிலையில், இவர் தன் அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, விஷ்ணு விஷால் அடுத்ததாக இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. இதனை விஷ்ணு விஷால் தனது சமூக வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும், புகைப்படத்தை பகிர்ந்து ‘பெரிய சம்பவம் லோடிங்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் அவரது 27-வது திரைப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை…
Delivery Boy Official Trailer | Radhika Sarathkumar | Leo Sivakumar | Nani | Sundaramurthy KS
Dheeram Dheeram Lyrical Video | Ranabaali | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan |…