puducherry-fans-who-waited-till-night-to-see-actor-vijay-shooting
நடிகர் விஜய் நடித்து வெங்கட்பிரபு இயக்கும் ‘தி கோட்’ திரைப்படம் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த திரைப்படத்தின் பாடல் காட்சிகள் புதுவையில் உள்ள பழமை வாய்ந்த ஏ.எப்.டி. மில்லில் படமாக்கப்பட்டது. இந்த படப்பிடிப்பில் நடிகர் விஜய் பங்கேற்றார்.தமிழக வெற்றி கழகம் தொடங்கி தலைவரான பிறகு முதல் முறையாக நடிகர் விஜய் படப்பிடிப்புக்கு வந்துள்ளார் என்ற தகவல் பரவியது. இதனையடுத்து விஜயை காண்பதற்காக ஆயிரக்கணக்கான தொண்டர்கள், ரசிகர்கள் புதுவை, கடலூர் சாலையில் உள்ள ஏ.எப்.டி. மில் முன்பு குவிந்தனர்.தளபதி.. தளபதி… என்று கோஷம் எழுப்பி ஆரவாரம் செய்தனர். தொடர்ந்து ரசிகர்கள் திரண்டு வந்த வண்ணம் இருந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. படப்பிடிப்பில் இருந்த விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் கை கூப்பி கலைந்து செல்லும்படி கேட்டும் ரசிகர்கள் கலையவில்லை.மாறாக மில் எதிரில் உள்ள மரத்தின் மீது ஏறியும் மில் சுவற்றின் மீதும் ஏறியும் விஜயை காண ரசிகர்கள் முயன்றனர்.
மாலை 5.45 மணிக்கு படப்பிடிப்பில் இருந்து வெளியே வேனில் வந்த விஜய் மில் நுழைவு வாயிலில் வேன் மீது ஏறி ரசிகர்களை பார்த்து கை அசைத்தார்.தொடர்ந்து அவரது பாணியில் முத்தத்தை பறக்க விட்டார். ரசிகர்கள் அவர் மீது பூக்களை தூவியும் மாலையை வீசியும் மகிழ்ச்சியை தெரிவித்தனர். ரசிகர்கள் ஒருவர் வீசிய மாலையை விஜய் அணிந்து கொண்டார். பின்னர் விஜய் அந்த மாலைகளை ரசிகர்களிடமே வீசி அவர்களுடன் செல்பி எடுத்து கொண்டார். பின்னர் படப்பிடிப்பு தளத்திற்குள் சென்றார். இதனையடுத்து ரசிகர்கள் கூட்டம் கலைந்து கடலூர் சாலையில் போக்குவரத்து சீரானது.நடிகர் விஜய் ரசிகர்கள் சந்தித்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதனால் மீண்டும் ரசிகர்கள் கூட்டம் ஏ.எப்.டி. மில் நோக்கி வந்தனர். அதில் பெண்கள், சிறுவர், சிறுமிகளும் ஆர்வமுடன் திரண்டு நின்றனர். அவர்கள் நடிகர் விஜயை பார்த்து விட்டுதான் செல்வோம் என்று நீண்ட நேரம் நின்றனர்.
போலீசார் கூட்டத்தை கலைந்து செல்லும்படி வற்புறுத்தியும் அவர்கள் அங்கிருந்து கலைந்து செல்லவில்லை. விஜய் படப்பிடிப்பில் இருந்து சென்றுவிட்டார் என்று உறுதியான தகவல் வந்த பின்னரே அவர்கள் கலைந்து சென்றனர். மாலை 3 மணியில் இருந்து இரவு 9மணி வரை சுமார் 6 மணி நேரம் விஜயை காண ரசிகர்கள் கூட்டம் குவிந்திருந்தனர்.இன்னும் 2 நாட்கள் படப்பிடிப்பு புதுவையில் நடைபெற உள்ளது. இன்று மதியம் நடைபெறும் படப்பிடிப்பில் நடிகர் விஜய் பங்கேற்பார் என திரைப்பட குழுவினர் தெரிவித்தனர். ஏற்கனவே இதே ஏ.எப்.டி. மில்லில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘லால் சலாம்’ சினிமா படிப்பிடிப்பு நடந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் விஜய்யின் பிரம்மாண்ட ஆக்ஷன் படைப்பாக உருவாகியுள்ள 'ஜன நாயகன்', அதிரடி, உணர்வு மற்றும் தேசப்பற்றை இணைத்து ரசிகர்களுக்கு…
Rasagulla Video Song | Hi | Nayanthara, Kavin | Anirudh Ravichander | Jen Martin |…
Thadumaarudhe Video Song | Toxic (Tamil) | Yash, Tara Sutaria | Tanishk, Arslan, Faheem |…
'கே.ஜி.எஃப்' வெற்றிக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் உருவாகி வரும் 'டாக்ஸிக்: A Fairytale for Grown-Ups' திரைப்படத்தின் இரண்டாவது…
செல்ல அய்யாவு எழுத்து, இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் ஜூலை 3-ஆம் தேதி வெளியான 'கட்டா…
தமிழ் திரைப்படங்களில் பிரம்மாண்டமான வான்வழி காட்சிகளை பதிவு செய்யும் முன்னணி ட்ரோன் ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக விளங்குபவர் எம். அரவிந்த் குமார்.…