தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். வெண்ணிலா கபடி குழு மூலம் அனைவருக்கும் பரிச்சயமான இவர் அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்திருக்கிறார். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான கட்ட குஸ்தி திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.
அதனைத் தொடர்ந்து தற்போது லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் “லால் சலாம்” திரைப்படத்தில் திருநாவுக்கரசு என்னும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்திருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நடிகர் விஷ்ணு விஷாலின் பிறந்தநாளை முன்னிட்டு லால் சலாம் படக்குழு கேக் வெட்டி செலபிரேட் செய்துள்ளனர். அப்புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கும் படகுழு அத்துடன் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.
It was double the celebration at the sets of #LalSalaam ???? yesterday as the team celebrated the 2nd schedule shoot wrap ???? along with our Thirunavukarasu ???? aka Vishnu Vishal's Birthday! ????
???? @rajinikanth
???? @ash_rajinikanth
???? @arrahman
???? @TheVishnuVishal & @vikranth_offl… pic.twitter.com/AA4RX7X1VK— Lyca Productions (@LycaProductions) July 17, 2023