ஆயிஷாவின் முன்னாள் கணவர் பேசியதற்கு விஷ்ணு கொடுத்த தரமான பதிலடி.. வைரலாகும் தகவல்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டிருப்பவர் ஆயிஷா. விஜய் டிவியில் அறிமுகமாக இருந்தாலும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சத்யா என்ற சீரியல் மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள இவரைப் பற்றி இவருடைய முன்னாள் கணவர் என சொல்லிக்கொண்டு ஒருவர் பேட்டி அளித்திருந்தார். அந்த பேட்டில் ஆயிஷா என்னை ஏமாற்றிவிட்டார் இதுவரை இரண்டு கல்யாணம் செய்து இருக்கிறார். விஷ்ணு லோகேஷ் என அவரது காதலர்கள் நீண்டு கொண்டே செல்லும் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சின்னத்திரை நடிகர் விஷ்ணு அளித்துள்ள பேட்டி ஒன்றில் ஆயிஷா ஷார்ட் டெம்பர். அவருக்கு டக்குனு கோபம் வந்துவிடும். எதையும் மனதில் வைத்துக் கொள்ள மாட்டார் எதுவாக இருந்தாலும் பளிச்சன பேசி விடுவார் எல்லோரும் ஒரே நேரத்தில் டார்கெட் செய்ததால் தான் கமல் சார் முன்பு அப்படி கோபமாக நடந்து கொண்டார். அதை அவள் புரிந்து கொண்டிருப்பாள் இந்த வாரம் மன்னிப்பு கேட்டாலும் கேட்கலாம் என கூறியிருக்கிறார்.

மேலும் ஒருவர் இல்லாத நேரத்தில் அவரைப் பற்றி மீடியாக்களில் தவறாக பேசுவது சரியான விஷயம் அல்ல. என்னைப் பொறுத்தவரை அது தப்பான விஷயம், இது போன்ற நபரிடம் இருந்து ஆயிஷா பிரிந்து வந்ததே நல்ல விஷயம் என விஷ்ணு தெரிவித்துள்ளார். அதாவது ஆயிஷாவின் முன்னாள் கணவர் அளித்த பேட்டிக்கு தான் இவர் இப்படி பதிலடி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

vishnu-about-aayesha-in-bigg-boss 6
jothika lakshu

Recent Posts

குஷ்புவின் மகள்கள் மீதான உருவக்கேலிக்கு ராதிகா கடும் கண்டனம்

சமூக வலைதளங்களில் தனது மகள்களை குறிவைத்து அவதூறு மற்றும் கேலி பதிவுகளை வெளியிடுபவர்களுக்கு நடிகை குஷ்பு சுந்தர் கடுமையாக எச்சரிக்கை…

2 days ago

“தாய்லாந்தில் ஜெயராமுடன் பிச்சை எடுத்து ரூ.100 சம்பாதித்தோம்!” – நடிகை பாவனா பகிர்ந்த சுவாரஸ்ய அனுபவம்

தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக விளங்கும் பாவனா, 'ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ்' படப்பிடிப்பின் போது நடந்த மறக்க…

2 days ago

‘கட்டா குஸ்தி 2’ பார்த்து பாராட்டிய ரஜினிகாந்த்… விஷ்ணு விஷால் நெகிழ்ச்சி!

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வரும் 'கட்டா குஸ்தி 2' திரைப்படத்தை பார்த்துவிட்டு, சூப்பர் ஸ்டார்…

2 days ago

ஹிப்ஹாப் ஆதியின் ‘மீசைய முறுக்கு 2’… செப்டம்பரில் ரிலீஸ்?

இளம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த…

2 days ago

விம்பிள்டன் 2026: இந்திய பிரபலங்களின் ஸ்டைலான ஃபேஷன் அணிவகுப்பு!

உலகின் புகழ்பெற்ற டென்னிஸ் தொடரான விம்பிள்டன் 2026, இந்த ஆண்டும் விளையாட்டுடன் சேர்த்து ஃபேஷன் உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உலக…

2 days ago

Boomer Man Official Trailer

Boomer Man Official Trailer | Ajith Gill , Karthik Kumar | THI KI | Vivek…

3 days ago