நடிகர் விஷால் நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘சிவப்பதிகாரம்’. கரு பழனியப்பன் இயக்கிய இந்தப் படத்தில் விஷால் ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நடிகை மம்தா மோகன்தாஸ். இதையடுத்து மலையாளத்தில் பிசியான அவர், தற்போது 15 ஆண்டுகளுக்கு பின் விஷாலுடன் மீண்டும் இணைந்து எனிமி படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், பஹ்ரைன் சென்றுள்ள நடிகை மம்தா, அங்குள்ள வீதிகளில் ‘ஹார்லி டேவிட்சன்’ பைக் ஓட்டிய வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: “நமக்கே பைக் ஓட்ட தெரியும்போது ஏன் மற்றவருக்காக நாம் காத்திருக்க வேண்டும். 15 ஆண்டுகளுக்கு பின் பைக் ஓட்டி இருக்கிறேன். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், எனக்கு இன்னும் அந்த டச் விட்டுப்போகவில்லை” என பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram