Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விஷால் 34 படத்தில் இணைந்த நடிகை.வைரலாகும் அறிவிப்பு.

vishal-34-character-update

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் லத்தி திரைப்படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் “மார்க் ஆண்டனி” திரைப்படத்தில் நடித்திருக்கிறார். நடிகை ரித்து வர்மா ஜோடியாக நடித்திருக்கும் இப்படத்தில் எஸ் ஜே சூர்யா, சுனில், செல்வராகவன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து இருப்பதை தொடர்ந்து இப்படம் வரும் விநாயகர் சதுர்த்திக்கு தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து விஷால் தனது “34 வது” படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை இயக்குனர் ஹரி இயக்க இருப்பதாகவும் அப்படத்தை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் ஜி ஸ்டூடியோ சவுத் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமான தகவல் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி வைரலானது.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் உருவாக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் தொடங்கிய நிலையில் விஷால் 34-வது படத்தின் கதாநாயகி குறித்த அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, இப்படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக இணைந்துள்ளார் என்பதை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அப்போஸ்டர் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.