viral-news-about-nadigar-sangam
சென்னையில் நேற்று தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு கூட்டம் நடைபெற்றது . அந்த கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் நாசர் தலைமை தாங்கி இருந்தார். மேலும் அந்நிகழ்ச்சியில் பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர்கள் பூச்சி முருகன், கருணாஸ் மற்றும் குஷ்பு, கோவை சரளா, ராஜேஷ், மனோபாலா, பசுபதி, சோனியா, பிரசன்னா, நந்தா உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது அந்நிகழ்ச்சியில் நடிகர் சங்க கட்டிட பணிகளை தொடங்குவது, கட்டிட நிதி திரட்டுவது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்கள் . மேலும் இந்நிகழ்ச்சியில் சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற நடிகர் சூர்யா, இசையமைப்பாளர் மற்றும் நடிகராக திகழும் ஜி.வி.பிரகாஷ், இயக்குனர் வசந்த் உள்ளிட்டோரை நடிகர் சங்க செயற்குழு கூட்டத்துக்கு அழைக்கப்பட்டனர். அதனால் அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர்களை நடிகர் சங்கம் செயற்குழு பாராட்டுகளைத் தெரிவித்து நினைவு சின்னம் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
பின்னர், நடிகர் சங்க கட்டிடதிற்கு நிதியாக சூர்யா, கார்த்தி, தயாரிப்பாளர் ராஜசேகர கற்பூர சுந்தரபாண்டியன் ஆகியோர் இணைந்து ரூ.25 லட்சத்துக்கான காசோலையை நடிகர் சங்கத் தலைவர் நாசரிடம் வழங்கினார்கள். இந்த தகவல் தற்போது வைரலாகியுள்ளது.
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…