Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விஜய் பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகப்போகும் வில்லு, எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது கோட் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கில்லி திரைப்படம் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் ஆன நிலையில் தற்போது வரை கூட்டம் கூட்டமாக மக்கள் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர்.

புதிய படம் வெளியானது கிடைக்கும் வசூலுக்கு நிகராக கில்லி ரீ ரிலீஸ் வசூல் சாதனை படைத்து வருகிறது. இந்த நிலையில் விஜயின் பிறந்தநாள் விருந்தாக விஜய் நயன்தாரா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற காமெடி கலாட்டா திரைப்படமான வில்லு படம் ரீ ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஜூன் 21ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகும் என்று தகவல்கள் கிடைத்துள்ளன. அதுமட்டுமின்றி கில்லி வசூல் வேட்டையால் விஜயின் பல படங்கள் ரீ ரிலீஸுக்கு தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது.

Villu movie re release update viral