தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் உலக நாயகன் கமல் ஹாசன். இவரது நடிப்பில் அடுத்ததாக விக்ரம் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் பகத் பாசில் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுத்து வழங்குவதால் இந்த படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்படுவதாக கூறி உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த வாரத்திற்கு முதல் வாரம் நிகழ்ச்சி தொகுத்து வழங்கும்போது கூறி நிகழ்ச்சியில் இருந்து விலகினார்.
இப்படியான நிலையில் தற்போது விக்ரம் படத்தின் படப்பிடிப்பு மொத்தமாக நிறைவடைந்து விட்டதாக படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டு உறுதிப்படுத்தி உள்ளார். இதனால் வனிதா சொன்னதுபோல பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கமல் விக்ரம் பட சூட்டிங் காரணமில்லை என தெரிகிறது.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தவறான பாதையில் செல்வதால் கமல் விலகியதாக கூறிய நிலையில் அது உண்மையோ என்று கேள்வி இந்த அப்டேட்டால் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
After 110 days of shoot it’s a WRAP ????
Thanx to the entire cast and crew for the EXTRAORDINARY effort! ????????@ikamalhaasan @VijaySethuOffl #FahadhFaasil @anirudhofficial #VIKRAM pic.twitter.com/5xwiFTHaZH— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) March 1, 2022

