சிறை திரைப்படத்தை பற்றி நம்மிடம் பகிரிந்த Vikram Prabhu!

சிறை திரைப்படத்தை பற்றி நம்மிடம் பகிரிந்த Vikram Prabhu!

விக்ரம் பிரபு நடித்திருக்கும் ‘சிறை’ அவருக்கு 25-வது திரைப்படம். சுரேஷ் ராஜகுமாரி இயக்கியுள்ள இப்படத்தில் தயாரிப்பாளர் லலித்தின் மகன் அகசய் சிறைக் கைதியாக நடித்திருக்கிறார். ஒரு போலீஸ்காரருக்கும் கைதிக்குமான உறவைச் சொல்லும் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பு பெற்றுள்ளது. இந்நிலையில் படம் பற்றி விக்ரம் பிரபு தெரிவிக்கையில்,

‘டாணாக்​காரன்’ படத்தை இயக்​கிய தமிழ்​தான் ‘சிறை’ கதையை எழு​தி​யிருக்​கார். ‘ஒரு போலீஸ் கதை இருக்​கு, கேட்கிறீங்​களா? என அவர் கேட்​டதும் ‘டாணாக்​காரன்’ படத்திற்கு பிறகு, போலீஸ் கதைகளா நிறைய வருது. இது​வும் போலீஸ் கதை​யா?’ என கேட்டேன்.
‘நேர்ல சொல்​றேன் கேளுங்​க’ன்னு வந்​தார். சொன்​னார். ரொம்ப சுவாரஸ்​யமா இருந்தது. நிறைய புது விஷ​யங்​களும் இருந்தது.

வெற்​றி​மாறன் சார்ட்ட ஒர்க் பண்​ணின, சுரேஷ் ராஜகு​மாரி இயக்​குறார்னு சொன்​னதும் சரின்னு சொன்​னேன். ஒரு உண்​மைச் சம்​பவக் கதையை ரொம்ப அரு​மையா பண்​ணி​யிருக்​கார். வசனங்​களை எல்லோருமே பாராட்டுவாங்க.

‘டாணாக்​காரனு’க்கு 15 கிலோ உடல் எடை குறைச்சு நடிச்​சேன். இதுல 15 கிலோ எடை அதி​கரிச்​சேன். போலீஸ் துறைக்​குள்​ளேயே இருந்து ஊறினவன் எப்​படி​யிருப்​பான்? அவன் மனநிலை எப்​படி​யிருக்​கும்? அவன் மற்​றவங்​களை எப்​படி பார்க்​கிறான்னு அந்த கேரக்​டர் இருக்​கும். நடிகனா இருக்​கிற​தால, நிறைய வாழ்க்​கையை வாழலாம்ல. இந்த கதா​பாத்​திரத்​துக்​காக வேறொரு வாழ்க்கையை வாழ்ந்திருக்​கேன்.

என் மேல இருக்​கிற அழுத்​தமே சினி​மாவுல மூன்​றாவது தலைமுறை நடிகன் அப்படிங்​கறது​தான். தாத்தா (சி​வாஜி கணேசன்) படங்​கள் பண்​ணின வேகத்துக்கும் அப்பா (பிரபு) படங்​கள்ல நடிச்ச வேகத்​துக்​கும் நான் இப்ப பண்​றதுக்​கும் நிறைய வித்​தி​யாசம் இருக்​கு. அப்​படித்​தான் சினி​மா​வும் வளர்ந்திருக்​கு. இந்த நேரத்​துல 25 படங்களை கடந்திருக்கிறதே பெரிய விஷ​யம்​தான்.

என்​னோட 25 வது படம், 2025-வது வருஷம் 25-ம் தேதி ரிலீஸ் ஆகறது மகிழ்ச்​சியா இருக்​கு. அடுத்த 25 வருஷம் என்ன பண்​ணப் போறேன்னு கேட்​டா, எங்​கிட்ட அப்​படி எது​வும் இல்​லை. இன்​னைக்கு இங்க இருக்​கிறதையே, நான் திட்​ட​மிடலை. அதனால ரொம்ப எதை​யும் யோசிக்க மாட்டேன்.

அன்​னன்​னைக்கு என்ன பண்​ணணுமோ, அதை மட்டுமே பார்ப்​பேன். அதி​கம் எதிர்பார்த்​தா, அதுவே சில நேரம் ஏமாற்றமாயிடும். அடுத்த 25 வருஷத்​துல இன்​னும் அதி​க​மான அனுபவங்​கள் கிடைச்​சிருக்​கும். சினி​மாங்​கறது கற்​றல் தானே. சினி​மாவுக்கு வந்த இத்தனை வருஷத்​துல நான் தெரிஞ்​சுகிட்ட விஷ​யங்​களை அடுத்​தடுத்த வருஷங்​கள்ல இன்​னும் சிறப்பா பயன்​படுத்துவேன்னு நினைக்​கிறேன்’ என கூறியுள்ளார்.

Vikram Prabhu shared with us about the movie Jail!
dinesh kumar

Recent Posts

VOWELS – An Atlas of Love Official Trailer Tamil

  https://youtu.be/dvAzQ4AW8XI?si=RwyVAUT4ydauDrvI

2 hours ago

Rai Rai Raa Raa Song (Tamil)

Rai Rai Raa Raa Song (Tamil) , Peddi ,Ram Charan , Janhvi , Buchi Babu…

2 hours ago

Leader – Official Teaser

Leader - Official Teaser ,Legend Saravanan , R. S. Durai Senthilkumar ,Ghibran Vaibodha https://youtu.be/2bdOxrr7Kvw?si=vUGe3Af95s-SSkqU

2 hours ago

Manithan Deivamagalam – Official Teaser

https://youtu.be/VI6Ugwjt7Ho?si=I4bWwA71FYPUW7s-

3 hours ago

டாக்ஸிக் ரிலீஸ் தேதியில் அந்த படத்தை இறக்கும் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

டாக்ஸிக் ரிலீஸ் தேதியில் அந்த படத்தை இறக்கும் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு! கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும்…

6 hours ago

எப்படிப்பட்ட மனைவியாக இருக்க விரும்புகிறீர்கள்? – ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்..

எப்படிப்பட்ட மனைவியாக இருக்க விரும்புகிறீர்கள்? - ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. 'காதல் கல்யாணம்' பற்றி ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. *…

6 hours ago