VIKRAM Movie Review
காவல் துறையில் இருப்பவர்களை மாஸ்க் அணிந்த மர்ம கும்பல் கொலை செய்கிறது. இதில் காளிதாஸ் ஜெயராமும் கொல்லப்படுகிறார். அதுபோல் காவல் துறையில் சம்மந்தம் இல்லாமல் இருக்கும், காளிதாசனின் வளர்ப்பு அப்பா கமலும் கொல்லப்படுகிறார். மாஸ்க் மனிதர்களை கண்டுபிடிக்க, சீக்ரெட் ஏஜென்சிஸ் ஆக இருக்கும் பகத் பாசிலிடம் ஒப்படைக்கப்படுகிறது.
மாஸ்க் மனிதர்கள் பற்றிய விவரங்களை சேகரிக்கும் பகத் பாசிலுக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கிறது. இறுதியில் பகத் பாசில், மாஸ்க் மனிதர்களை கண்டுபிடித்தாரா? கமலை மாஸ்க் மனிதர்கள் கொலை செய்ய காரணம் என்ன? மாஸ்க் மனிதர்கள் காவல் திரையினரை கொல்ல காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் கமல், முதல் பாதியில் கர்ணனாகவும், இரண்டாம் பாதியில் விக்ரமாகவும் நடித்திருக்கிறார். குடிகாரன், மகனை நினைத்து கவலைப்படும் பாசமான தந்தை. பேரனை நினைத்து ஏங்கும் தாத்தா என நடிப்பில் பளிச்சிடுகிறார். அதுபோல், நடனம், ஆக்ஷன், என ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார்.
கமலுக்கு அடுத்தபடியாக பலருடைய கவனத்தை ஈர்த்து இருக்கிறார் பகத் பாசில். முதல் பாதி முழுவதும் திரைக்கதையை தன் வசம் படுத்தி இருக்கிறார். சின்ன சின்ன அசைவுகளில் கூட ரசிக்க வைத்திருக்கிறார் விஜய் சேதுபதி. அலட்டல் இல்லாத இவரது நடிப்பு படத்திற்கு பெரிய பலம். காயத்ரி, மைனா, சிவானி ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.
போதை பொருளை மையமாக வைத்து ஆக்ஷன், சென்டிமென்ட், பழிக்கு பழி என திரைக்கதை அமைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார் இயக்குனர்.
அனிருத் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். பின்னணி இசையில் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். கிரீஸ் கங்காதரனின் ஒளிப்பதிவு சிறப்பு.
House Husband Lyric Video | Gatta Kusthi 2 | Sean Roldan | Vishnu Vishal, Aishwarya…
Pere Illa Lyrical Video | Sing Geetham | Singeetham Srinivasa Rao | Devi Sri Prasad…
Adakuna Adakuna Lyric Video | Dark | Ajay Karthi | Manu Ramesan | Anthony Daasan…
‘டிராகன்’ திரைப்படம் மற்றும் ‘பவள மல்லி’ மியூசிக் ஆல்பம் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை கயாடு லோஹர்,…
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா உள்ளிட்டோருடன் இணைந்து அதர்வா நடித்துள்ள 'பராசக்தி' திரைப்படம், அவரது திரைப்பயணத்தில் முக்கியமான…
நடிகர் விக்ரம் நடிப்பில், இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய 'துருவ நட்சத்திரம்' திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் ஜூலை…