உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விக்ரம்.
அனைவரிடமும் மிக பெரியளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள விக்ரம் படத்தின் First Glance வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் விக்ரம் திரைப்படம் அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் வெளியாகலாம் என கூறப்பட்டது.
ஆனால் தற்போது கமலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவதால் அப்படத்தின் ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே விக்ரம் படத்தின் ரிலீஸ் ஒரு சில வாரங்கள் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.