Vikram Movie Latest Update
தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தை தொடர்ந்து கார்த்தியை வைத்து கைதி என்ற படத்தை இயக்கி வெற்றி கண்டார்.
இதனை அடுத்து விஜய்யை வைத்து மாஸ்டர் என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தவர் தற்போது உலக நாயகன் கமல்ஹாசனை ஹீரோவாக வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்கி உள்ளார். ஜூன் மூன்றாம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.
படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், ஷிவானி நாராயணன் உட்பட பல்வேறு நடிகர் நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர். இன்று மாலை இந்த படத்தின் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மே 15-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…