தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான மகான் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து விக்ரம் நடிப்பில் அடுத்ததாக கோப்ரா என்ற திரைப் படம் ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் விக்ரம் வித விதமான 7 கெட்டப்புகளில் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் படத்தின் ரிலீஸ் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார் இயக்குனர் அஜய் ஞானமுத்து.
எல்லா படத்தோட அப்டேட் வந்துகிட்டே இருக்கு கோப்ரா படத்தோட அப்டேட்டை வெளியிடுங்கள் என ரசிகர் ஒருவர் கேட்க படத்தை மே 26-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டு வருவதாக இயக்குனர் அஜய் ஞானமுத்து தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
எல்லா படமும் ரிலீஸ் ஆகிட்டு இருக்கு..இன்னும் #Cobra
"Release Date" தான் வராம
இருக்கு சீக்கிரமா அடுத்த அனௌன்ஸ்மென்ட் விடுங்க
பா …????????@AjayGnanamuthu @7screenstudio @RamVJ2412 @mugeshsharmaa pic.twitter.com/TTQEQecFhF— SENTHIL MARELEY (@smc_styles) February 24, 2022