கோப்ரா படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா? படக்குழு வெளியிட்ட லேட்டஸ்ட் அப்டேட்

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் தான் நடிகர் விக்ரம். இவர் நடிப்பில் ஐ, கடாரம் கொண்டான் போன்ற வெற்றி படங்களை தொடர்ந்து தற்போது நடித்துள்ள படம் தான் “கோப்ரா”. இந்த படத்தை டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற திரளரான படங்களை எடுத்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ள இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார்.

இதில் விக்ரம் ஜோடியாக ஸ்ரீநிதி செட்டி இணைந்து நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் கே எஸ் ரவிக்குமார், குஜராத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கன்னிகா, மிருணாளினி, ஜான்விஜய் ஆகியோர் இணைந்துள்ளனர். லலித் குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் பின்னணி இசை அமைத்திருக்கிறார்.

இப்படத்தில் இருந்து அண்மையில் வெளியான ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிக கெட்டப்பில் விக்ரம் இந்த படத்தில் நடித்துள்ளதால் ரசிகர்களின் இடையே பெரிய எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது. கடந்த ஆண்டு வெளியாக வேண்டிய இந்த படம் கொரோனா தாக்கம் காரணத்தினால் ரிலீஸ் தேடியே படக்குழு தள்ளி வைத்தது. தற்போது இப்படம் ஆகஸ்ட் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரவபூர்வமான தகவலையும் அண்மையில் படக்குழு வெளியிட்டீருந்தது.

மேலும் ரசிகர்களுக்கு உற்சாக அளிக்கும் விதமாக இப்படத்திற்கான இசை வெளியீட்டு விழாவை வரும் ஜூலை 11ஆம் தேதி சென்னையில் உள்ள பீனிக்ஸ் மாலில் நடைபெற உள்ளதாக படக்குழு வீடியோ பதிவின் மூலம் வெளியிட்டுள்ளது. இந்த புதிய தகவலால் உற்சாகமடைந்த ரசிகர்கள் இதனை வைரலாக்கி வருகின்றனர்.

jothika lakshu

Recent Posts

Nenjanathi Lyrical Video

Nenjanathi Lyrical Video | TVK | THEEYADHU VELLA KELEER | Rony | Kavi Priya |…

1 day ago

Jai Jai Rama Video Song

Jai Jai Rama Video Song Tamil | Ramayana | Namit M, Nitesh T | Ranbir,…

1 day ago

மீசைய முறுக்கு 2 – திரைவிமர்சனம்

கானா பாடகரான ஹிப்ஹாப் ஆதி, கானா இசையை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கிறார். பல்வேறு மேடைகளில்…

2 days ago

தி பாரடைஸ் – திரை விமர்சனம்

தெலுங்கானாவில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வறுமையிலும் அடிமைத்தனத்திலும் வாழ்கின்றனர். அவர்கள் வசிக்கும் ‘பாரடைஸ்’ பகுதியின் அதிகாரமிக்க தலைவனாக மோகன் பாபு…

2 days ago

டிராகன் 2 படத்தின் போஸ்டர் போலியானது – படக்குழு விளக்கம்

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’…

2 days ago

உங்கள் ட்ரோல்களையும் ரசித்தேன் – தி பாரடைஸ் விமர்சனங்கள் குறித்து நானி!

ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’…

2 days ago