Vikram 62 Movie Latest Update
விக்ரம் நடிக்கும் 62வது திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க இருப்பதாகவும் இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
விக்ரம் நடித்த மகான் படம் கடந்த பிப்ரவரி மாதம் ஓ.டி.டி. தளத்தில் வெளியானது. தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா, மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன், கவுதம் மேனனின் துருவ நட்சத்திரம் ஆகிய படங்கள் கைவசம் உள்ளன. இந்த படங்களில் நடித்து முடித்துள்ளார். இவை அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன.
தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இது விக்ரமுக்கு 61-வது படம். பட வேலைகள் தொடங்கி உள்ளன. இந்நிலையில், விக்ரம் நடிக்க உள்ள 62-வது படம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க இருப்பதாகவும் இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் ஏற்கனவே தீனா, ரமணா, கஜினி, ஏழாம் அறிவு, துப்பாக்கி, கத்தி, சர்கார் உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார்.
பிரபாஸ் நடித்த 'த ராஜா சாப்' படம் ஓடிடி.யில் ரிலீஸ்.. மாருதி இயக்கத்தில் பிரபாஸ், நிதி அகர்வால், மாளவிகா மோகனன்,…
அட்ஜெஸ்ட்மென்ட் இல்லை; சிரஞ்சீவி பேச்சு சர்ச்சை: வைரலாகும் நிகழ்வு சிரஞ்சீவியின் திரைப்பயணத்தில் பெரிய வெற்றிப்படம் ஆகி விட்டது அனில் ரவிபுடி…
விஜய் தேவரகொண்டாவுடன் 3-வது முறையாக இணையும், ராஷ்மிகா… வெளியானது ‘ரணபாலி’ மாஸ் அப்டேட் தெலுங்கு சினிமாவான 'ரணபலி' படத்தின் தகவல்கள்…
KGF -காந்தாரா டீமுடன் கூட்டணி அமைக்கும் சிவகார்த்திகேயன் ? இயக்குனர் யார் தெரியுமா ? பராசக்தி படத்தை தொடர்ந்து எஸ்கே…
கலெக்டர் ஆபீஸ்க்கு மனுவுடன் வந்துள்ளார் பிக் பாஸ் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி…
‘ஜனநாயகன்’ படத்துக்கு தொடரும் சிக்கல்: மீண்டும் விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு - முழு விவரம் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்துக்கு…