தனது கணவர் குறித்து பரவும் குற்றச்சாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பென்சி.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி யின் மூலம் அறிமுகமானவர் புகழ் அதனை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
சின்னத்திரையில் மட்டுமில்லாமல் வெள்ளித்திரையிலும் சில படங்களில் காமெடியனாக நடித்திருந்த இவர் சமீபத்தில் மிஸ்டர் ஜு கிப்பர் என்ற படத்தில் நடித்திருந்தார்.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையும் பெற்றிருந்தது.
படங்களில் ஒரு பக்கம் நடித்தாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளும் கோமாளியாக தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.இந்த நிலையில் தற்போது நடைபெற்று வந்த சீசன் 6 நிகழ்ச்சி இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் புகழின் மனைவி பென்சி குழந்தையுடன் கலந்து கொண்டிருந்தார் அப்போது புகழ் பெண்களை தொட்டு தொட்டு பேசுகிறார் என்ற குற்றச்சாட்டு குறித்து பேசி உள்ளார் அதாவது ஷோவை ஷோவாக பார்க்க வேண்டும் என்றும் இதில் பிரச்சனை யாருக்கு என்றால் அந்தப் பெண்ணுக்கு தான் என் கணவரை பற்றி எனக்கு தெரியும் தவறான நோக்கத்துடன் பழகும் எந்த ஒரு ஆண்களிடமும் ஒரு பெண் பழக மாட்டால் முதல் சீசன்ல இருந்து தற்போது வரை அனைத்து பெண்களும் இவருடன் நட்பாக பழகிக் கொண்டு இருக்கின்றனர் இதுவே ஒரு ஆணின் குணம் என்ன என்பதை உணர்த்தும் என்பதை கூறியுள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
