Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி.. கமல்ஹாசன் படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்

vijaysethupathi-acting-again-with-kamal-haasan movie

இந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத மாபெரும் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் நடிகர் கமல்ஹாசன். இவர் தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பல முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த நிலையில் கமல்ஹாசனின் 233-வது திரைப்படத்தை மூன்று முறை அஜித் திரைப்படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இயக்குனர் எச்.வினோத் இயக்க இருப்பதாகவும், இதில் கமலுடன் நடிகர் விஜய் சேதுபதியும் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. ஏற்கனவே கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடித்து வரவேற்பை பெற்று இருந்ததால் இந்த தகவல் குறித்த அறிவிப்பிற்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

vijaysethupathi-acting-again-with-kamal-haasan movie
vijaysethupathi-acting-again-with-kamal-haasan movie