தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய்.இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் விஜய் சூர்யா நடிப்பில் 2001 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பிரண்ட்ஸ். இயக்குனர் சித்திக் இயக்கத்தில் இந்த திரைப்படம் உருவாகி இருந்த நிலையில் விஜய்க்கு ஜோடியாக தேவயானி நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி 24 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதாவது நவம்பர் 21ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
