Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தளபதி விஜய் வாங்கிய புதிய வீட்டில் விலை என்ன தெரியுமா? வைரலாகும் தகவல்

vijays-new-home-in-chennai

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். உலகம் முழுவதும் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவர் வாரிசு நடிகராக சினிமாவில் அறிமுகமாக இருந்தாலும் தன்னுடைய திறமையால் விடாமுயற்சியால் தொடர்ந்து உச்சத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார்.

தமிழ் சினிமாவின் டாப் நடிகராக விளங்கிவரும் இவர் சமீபத்திய படங்களுக்கு 100 கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்கி வருகிறார். இவரது நடிப்பில் அடுத்ததாக வாரிசு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் தளபதி விஜய் சென்னையில் புதியதாக வீடு ஒன்றை வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே நீலாங்கரையில் பிரம்மாண்ட வீட்டில் குடும்பத்துடன் வசித்து வரும் விஜய் தற்போது அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒன்றை வாங்கியுள்ளார். இந்த வீட்டின் விலை 35 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது.

புதிதாக வாங்கியுள்ள இந்த வீட்டை விஜய் அலுவலகமாக பயன்படுத்த போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

vijays-new-home-in-chennai
vijays-new-home-in-chennai