Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பீஸ்ட் படத்தின் புதிய அப்டேட்

vijay's beast latest update

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும், யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்து வருகின்றனர்.

அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்ட நிலையில் விரைவில் இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், பீஸ்ட் படத்தின் புதிய போஸ்டர்கள் வரும் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.