Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விஜயகாந்த் நடிப்பில் வெளியான “பெரியண்ணா” படத்தில் சூர்யாவுக்கு பதிலாக நடிக்க இருந்தது யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக அரசியல் தலைவராக வளம் வந்து மக்களின் மனதை வென்றவர் கேப்டன் விஜயகாந்த். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவர் உயிரிழந்தார்.

இவருடைய மறைவு இன்று வரை மக்களால் மறக்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. கேப்டன் விஜயகாந்த் உடன் தளபதி விஜய் சூர்யா என பல நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். ஆனால் அதே காலகட்டத்தில் நடிக்க தொடங்கிய அஜித் விஜயகாந்த் உடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் அதை வேண்டாம் என மறுத்துள்ளார்.

ஆமாம் கேப்டன் விஜயகாந்தின் உதவியாளர் சுப்பையா தயாரிப்பில் வெளியான பெரியண்ணா படத்தில் சூர்யாவின் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது அஜித் தானாம். இந்த படத்திற்காக அவரை அணுகியபோது முதுகு வலியால் அவதிப்பட்டு வருகிறேன் படப்பிடிப்பில் நடிக்க முடியாமல் படுத்து விட்டால் பெயர் கெட்டுப் போய்விடும் அதனால் இந்த வாய்ப்பு வேண்டாம் என நிராகரித்ததாக சொல்லப்படுகிறது.

அதன் பின்னரே பெரியண்ணா பட வாய்ப்பு சூர்யாவின் கைக்கு சென்றுள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளன.

Vijayakant movie latest update viral
Vijayakant movie latest update viral