மறைந்த போண்டா மணிக்கு இரங்கல் தெரிவித்து பதிவு வெளியிட்ட விஜயகாந்த்

கே.பாக்யராஜ் நடித்த பவுனு பவுனுதான் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமானவர் போண்டா மணி. வடிவேலு, கவுண்டமணி, விவேக் உள்பட பல நடிகர்களுடன் சேர்ந்து காமெடி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். கோயம்புத்தூர் மாப்ளே, வின்னர், வசீகரா, ஏய், வேலாயுதம், என்னைப் பார் யோகம் வரும் உள்பட சுமார் 270 படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் போண்டா மணி சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டு சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் 2 மாதம் சிகிச்சை பெற்றார். 2 சிறுநீரகமும் செயலிழந்த நிலையில் மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையிலும், தனியார் மருத்துவமனையிலும் பதிவு செய்துள்ளார்.

பல்லாவரம் பொழிச்சலூர் வாடகை வீட்டில் வசித்தபடி சிகிச்சை பெற்று வந்த போண்டா மணி வறுமையில் வாழ்ந்து வந்தார். அவருக்கு திரை பிரபலங்கள் பலர் உதவி செய்து வந்தனர். இதையடுத்து நடிகர் போண்டா மணி நேற்றிரவு 11 மணிக்கு வீட்டில் திடீரென மயக்கமடைந்தார். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். போண்டாமணியின் மறைவுக்கு திரைப் பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், போண்டா மணிக்கு இரங்கல் தெரிவித்து நடிகர் விஜயகாந்த் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் வேதனையுமடைந்தேன். என் மீது மிகுந்த அன்பும், நட்பும், மரியாதையும் கொண்ட நல்ல மனிதர்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

jothika lakshu

Recent Posts

நடிகர் அர்ஜுன் தாஸின் கான் சிட்டி ஓடிடி தேதி அறிவிப்பு!

அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘கான் சிட்டி’ திரைப்படம், தற்போது ஓடிடி வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.…

8 hours ago

கவின் – நயன்தாரா நடிக்கும் ‘Hi’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வரும் நடிகர் கவின், தற்போது விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகி…

8 hours ago

தனுஷை விட பெரிய நடிகர்கள் இல்லையா? – கஸ்தூரி ராஜா ஆவேசம்

72வது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலில் நடிகர் தனுஷிற்கு இரண்டு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து எழுந்த அரசியல்…

8 hours ago

பிறந்தநாளில் தனது 5 ஆண்டு கனவு திட்டத்தை அறிமுகப்படுத்திய சாக்ஷி அகர்வால்!

நடிகை சாக்ஷி அகர்வால் தனது பிறந்தநாளை முன்னிட்டு, கடந்த 5 ஆண்டுகளாக உருவாக்கி வந்த ‘OKUU’ என்ற பிரீமியம் பெர்ஃபார்மன்ஸ்…

8 hours ago

இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழு மலை’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

இயக்குநர் ராம் இயக்கத்தில், நிவின் பாலி, அஞ்சலி, சூரி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படத்தின் வெளியீட்டு…

8 hours ago

The India Story Official Trailer

The India Story Official Trailer - Tamil| Kajal A Kitchlu | Shreyas Talpade |Chettan DK…

1 day ago