vijayakant-death-update viral
“90-களில் ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்தவர் விஜயகாந்த். இவர் பல படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். ‘கேப்டன்’ என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும் விஜயகாந்த் நடிகராக மட்டுமல்லாமல் மனிதநேயம் மிக்கவராகவும் இருந்தார். மக்கள் பலருக்கு தன்னால் இயன்ற பல உதவிகளை செய்தார். இவர் தேமுதிக கட்சியின் தலைவராகவும் இருந்தார். இதையடுத்து நடிகர் விஜயகாந்த் நேற்று முன்தினம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் ஓரிரு நாளைக்குள் வீடு திரும்புவார் என்றும் தேமுதிக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.தொடர்ந்து, விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டது. விஜயகாந்தின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இதையடுத்து மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் இன்று காலமானார். இவரது மறைவிற்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் என பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் நாகர்கோவிலில் நடைபெற்று வந்த ‘வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்த சென்னை வருகிறார்.
Appo Ippo - Lyrical video , Indian Penal Law (IPL) , TTF Vasan , Kishore…
மழைக்காலத்தில் எந்தெந்த படங்கள் சாப்பிடக்கூடாது என்பது குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…
Aaromaley - Trailer | Silambarasan TR | Kishen Das | Harshath Khan | Shivathmika |…
https://youtu.be/QC_9eRGrkjQ?t=1