Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மிட் வீக் எலிமினேஷனில் வெளியேற்றப்பட்ட போட்டியாளர். யார் தெரியுமா? வைரலாகும் தகவல்?

vijay-varma-quit-from-bb-midweek-elimination

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

வரும் ஞாயிற்றுக்கிழமை கிராண்ட் பைனல் நடைபெற உள்ள நிலையில் தற்போது அர்ச்சனா, மாயா, விஜய் வர்மா, தினேஷ், மணி, விஷ்ணு ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்து வருகின்றனர். பழைய போட்டியாளர்கள் மீண்டும் வீட்டிற்குள் அனுப்பப்பட்டு வரும் நிலையில் மிட் வீக் எலிமினேஷனில் போட்டியாளர் ஒருவர் வெளியேற்றப்பட்டு இருப்பதாக நம்பத் தகுந்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஃபைனல் நெருங்கும் வேலையில் இப்படி நடப்பது வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில் தற்போது நடந்து முடிந்துள்ள மிட் வீக் எலிமினேஷனில் குறைந்த ஓட்டுக்களை பெற்று கடைசி இடத்தில் இருந்து வரும் விஜய் வர்மா வெளியேற்றப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது குறித்த காட்சிகள் இன்று அல்லது நாளைய எபிசோட் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

vijay-varma-quit-from-bb-midweek-elimination
vijay-varma-quit-from-bb-midweek-elimination