Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் விஜய் டிவியின் புதிய நிகழ்ச்சி.. வைரலாகும் சூப்பர் ஹிட் தகவல்

vijay-tv-start-new-show update

சின்னத்திரையில் வித்தியாசமான நிகழ்ச்சிகளை ஆரம்பித்து பல ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருக்கும் பிரபல தொலைக்காட்சிகளில் முன்னிலையில் நிற்கும் தொலைக்காட்சி தான் விஜய் டிவி. இதில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளும் ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பது மட்டுமின்றி அதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் மக்களின் ஃபேவரிட் ஆகவும் மாறி வருகின்றனர். அதற்குக் காரணம் இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளும் மக்களை சிரிக்க வைக்கும் விதமாகவே இருப்பது தான்.

அதேபோல் தற்போது விஜய் டிவி புதிய நிகழ்ச்சி ஒன்றை படம் பிடித்து வருகின்றது. அந்நிகழ்ச்சிக்கு “ஊ சொல்றியா ஊஊ சொல்றியா” என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு தொகுப்பாளர்களாக வழக்கம் போல் மாகாபாவும், பிரியங்காவும் தொகுத்து வழங்க உள்ளனர்.

மேலும் இந்நிகழ்ச்சியில் சிவாங்கி, சந்தோஷ் பிரதாப், பவித்ரா, சுனிதா போன்றோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கிறார்கள் என வெளியான புகைப்படத்தின் மூலம் தெரிய வந்துள்ளது. விரைவில் இந்நிகழ்ச்சி காண ப்ரோமோ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.