Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

லைலா உடன் கேர்ள்ஸ் வீடியோ வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர். வீடியோ வைரல்

vijay-tv-star-reels-video-with-laila

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை லைலா. பல முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடி போட்டு நடித்து பல ரசிகர்களின் மனதை கவர்ந்த இவர் நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கிறார். இவரது நடிப்பில் அண்மையில் வெளியான சர்தார் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து இவர் அண்மையில் பிரபல ott தளத்தில் வெளியான எஸ் ஜே சூர்யா வின் வதந்தி வெப் சீரிஸிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதில் விஜய் தொலைக்காட்சியில் பிரபல சீரியலாக ஓடிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர் தொடரில் கதிர் என்னும் கதாபாத்திரத்தில் நடிக்கும் குமரனும் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் நடிகை லைலா சீரியல் நடிகர் குமரனுடன் இணைந்து அவரது பழைய பாடல் ஒன்றிற்கு ரிலீஸ் வீடியோ செய்துள்ளார். அது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.