Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விஜய் டிவி சீரியல்களில் நேரம் மாற்றம்..காரணம் என்ன தெரியுமா?

vijay-tv-serials-new-telecast-time-changes

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சி இதுவரை ஐந்து சீசன்களை நிறைவு செய்துள்ள நிலையில் வரும் அக்டோபர் ஒன்பதாம் தேதி முதல் ஆறாவது சீசன் தொடங்கப்பட உள்ளது.

இந்த நிகழ்ச்சி காரணமாக சிப்பிக்குள் முத்து சீரியல் முடிவுக்கு வர உள்ளது. அது மட்டுமல்லாமல் பாரதிதாசன் காலனி என்ற சீரியல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட உள்ளது.

மேலும் சீரியல்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. தற்போது கசிந்துள்ள தகவல் படி எந்தெந்த சீரியல் எப்போது ஒளிபரப்பாகும் என தெரிய வந்துள்ளது. அதாவது வரும் அக்டோபர் 10ஆம் தேதி முதல்

1. மாலை 6 மணிக்கு மௌன ராகம் 2

2. மாலை 6.30 மணிக்கு தமிழும் சரஸ்வதியும்

3. இரவு 7 மணிக்கு ராஜா ராணி 2

4. இரவு 7.30 மணிக்கு ஈரமான ரோஜாவே 2

5. இரவு 8 மணிக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ்

6. இரவு 8.30 மணிக்கு பாக்கியலட்சுமி

7. இரவு 9 மணிக்கு பாரதி கண்ணம்மா

8. இரவு 9:30 மணி முதல் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என தெரியவந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் அக்டோபர் 10ஆம் தேதி முதல் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி இரண்டு சீரியல்களை இணைந்து மெகா சங்கமம் என்ற பெயரில் ஒரு மணி நேர எபிசோடாக ஒளிபரப்பாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

vijay-tv-serials-new-telecast-time-changes
vijay-tv-serials-new-telecast-time-changes