Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிரபல சீரியலின் காப்பியா? விஜய் டிவியின் புதிய சீரியல் சக்திவேல். ரசிகர்கள் கமெண்ட்

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி சேனல்களில் ஒன்று ஜீ தமிழ், இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு உண்டு, இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று தான் மீனாட்சி பொண்ணுங்க.

ஆரியன், சௌந்தர்யா ஆகியோர் இணைந்து நடித்து வரும் இந்த சீரியல் பெரும்பாலான ரசிகர்களுக்கு மிகவும் பேவரைட். அதிலும் குறிப்பாக வெற்றி, சக்தி ஜோடி பலருக்கும் பிடித்த ஒன்றாக இருந்து வருகிறது. இந்த சீரியலின் அறிமுக ப்ரோமோ வீடியோவை போலவே தற்போது விஜய் டிவி புதிய சீரியல் ப்ரோமோ ஒன்றை வெளியிட பலரும் அதனை கலாய்த்து வருகின்றனர்.

ஆனால் சக்திவேல் என்ற பெயரில் வெகுவிரைல் புதிய சீரியல் ஒன்று ஒளிபரப்பாக இருப்பதாக விஜய் டிவி ப்ரோமோவை வெளியிட்டுள்ளது, அதில் ஹீரோ அடிதடி செய்யும் ஒருவராக இருக்கிறார், பொண்ணுங்கள நான் பார்க்க கூடாது என்னை தான் பொண்ணுங்க பார்க்கணும் என பில்டப் கொடுத்து பேச ஹீரோயின் என்ட்ரி கொடுக்க அப்படியே பின்னாடியே செல்கிறார்.

Vijay Tv serial issue update
Vijay Tv serial issue update

இந்த வீடியோவை பார்த்த பலரும் இது மீனாட்சி பொண்ணுங்க சீரியல் ஆச்சே என கலாய்த்து வருகின்றனர். இந்த சீரியலில் நாயகன் பெயர் வேல், நாயகி பெயர் ஷக்தியாக இருக்கும் அதனால் தான் ஷக்தி வேல் என தலைப்பு வைத்திருப்பதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதே சமயம் மீனாட்சி பொண்ணுங்க சீரியலிலும் நாயகி பெயர் ஷக்தி என்பதையும் குறிப்பிட்டு கலாய்க்கின்றனர்.

Vijay Tv serial issue update
Vijay Tv serial issue update