Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

புதிய சீரியலின் ப்ரோமோ வெளியிட்ட விஜய் டிவி,வைரலாகும் வீடியோ

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது.

டிவி சேனலும் தொடர்ந்து புதுப்புது சீரியல்களை களத்தில் இறக்கி வருகிறது. கடந்து திங்கள் முதல் வீட்டுக்கு வீடு வாசப்படி என்ற சீரியல் ஒளிபரப்பாகி வரும் நிலையில் மேலும் ஒரு புதிய சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீரியலுக்கு பனி விழும் மலர் வனம் என்ற சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.

ஈரமான ரோஜாவே புகழ் சித்தார்த் நாயகனாக நடிக்கிறார். அண்ணன் தங்கை பாச கதையாக இந்த சீரியல் ஒளிபரப்பாக உள்ளது என்பது ப்ரோமோ மூலம் உறுதியாகி உள்ளது. புது சீரியல் ப்ரோமோவால் எந்த சீரியல் முடிய போகிறது என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.