Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விஜய் நட்சத்திரங்களுடன் நவராத்திரி கொண்டாட்டத்திற்கு தயாரா மக்களே..!

vijay tv navaratri celebration 2024 details

இந்த வருடம் நவராத்திரியை பிரம்மாண்டமாக கொண்டாட உள்ளது விஜய் டிவி.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் நிகழ்ச்சிகள் என அனைத்துமே ரசிகர்களை கவரும் வகையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் மக்களை மகிழ்விக்க நட்சத்திர கொண்டாட்டமும் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தற்போது நவராத்திரி கொண்டாட்டத்தை விமர்சையாக செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த வருடத்தைப் போலவே இந்த வருடமும் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த சிறப்பாக பல நவீன முயற்சிகளை இந்த வருடம் விஜய் டிவி மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே கடந்த வருடம் மிகப்பெரிய வெற்றியடைந்த நவராத்திரி கொண்டாட்டம் மாடிஸ் e4m மற்றும் ப்ரோமேக்ஸ் போன்ற விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இந்த வருடமும் பெண்கள் குழந்தைகள் மூத்த குடிமக்கள் என அனைவருக்கும் பொழுது போக்கு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளது. அக்டோபர் 4ஆம் தேதி தொடங்கும் இந்த நவராத்திரி கொண்டாட்டம் மதுரை, திருநெல்வேலி, திருச்சி, ஈரோடு, தஞ்சாவூர், காஞ்சிபுரம் மற்றும் சென்னை ஆகிய நகரங்களில் பத்தாம் தேதி வரை கொண்டாட உள்ளது.

இந்த ஆண்டு நடக்கப் போகும் நவராத்திரி கொண்டாட்டத்தின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம் :

அலங்கார திட்டங்களும் பிரபலங்களுடன் செல்பி எடுக்கும் ஸ்பாட்களும் இருக்கும். ரசிகர்கள் தங்களுக்கு விருப்பமான பிரபலங்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்து கொள்ளலாம் சிறகடிக்க ஆசை மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலங்களுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

மேலும் சிறகடிக்க ஆசை தொடரின் மீனா கதாபாத்திரத்திற்காக சில பூ கடைகளும் வைக்கப்பட்டிருக்கிறது அங்கு பூ வாங்கியும் மகிழலாம்.இது மட்டும் இல்லாமல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகள், விளையாட்டு, செஃப் தாமுவின் சிறப்பு பிரசாதம் என ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்த உள்ளது. விஜய் டிவி பிரபலங்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மகிழ்விக்க உள்ளனர்.

நிகழ்ச்சி நடக்கும் இடம் மற்றும் விபரங்கள் :

அக்டோபர் 04 : மதுரையில் ஏடிஆர் மஹால், காமராஜர் சாலை ,மீனாட்சி நகர் மதுரை.

அக்டோபர் 05 : திருநெல்வேலி கவின் மஹால், ஈபா கார்டன், பொதிகை நகர், பெருமாள்புரம், திருநெல்வேலி

அக்டோபர் 06 : திருச்சி தாஜ்மஹால், கரூர் பைபாஸ் சாலை, கில்லாசிந்தாமணி, திருச்சி

அக்டோபர் 07 : ஈரோடு விவாக லட்சுமி மஹால், பெரிய சேமூர் கிராமம், ஈரோடு

அக்டோபர் 08 : தஞ்சாவூர் பிரகதமணி மஹால், வண்ணக்கார தெரு, மஹர்ணொன் சாவடி தஞ்சாவூர்

அக்டோபர் 09 : காஞ்சிபுரம் என்.ஜி பேலஸ், வந்தவாசி சாலை, செவிலிமேடு, காஞ்சிபுரம்

அக்டோபர் 10 : சென்னை ஸ்ரீ கஜலட்சுமி கல்யாண மண்டபம், பூனமல்லி ஹை ரோடு, வேலப்பன்சாவடி திருவேற்காடு, சென்னை

நீங்களும் விஜய் நட்சத்திரங்களுடன் நவராத்திரி கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு மகிழ்ச்சி அடையுங்கள்.

vijay tv navaratri  celebration 2024 details
vijay tv navaratri celebration 2024 details