விஜய் டிவியில் என்றும் மக்களின் ஃபேவரட்டாக இருக்கக்கூடிய நிகழ்ச்சி எது என்றால் அது கலக்கப்போவது யாரு தான். ஏனெனில் இந்நிகழ்ச்சியின் பங்கேற்றதின் மூலம் பல பிரபலங்கள் தற்போது வெள்ளித்திரையில் கலக்கிக் கொண்டிருக்கின்றனர். அதற்கு அனைவருக்கும் எடுத்துக்காட்டாக அமைந்தவர்தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் வெள்ளித்திரையில் பெரிய ஸ்டார் ஆகிவிட்டாலும் அவர் தன்னை வளர்த்து விட்ட விஜய் டிவியை மறக்கவில்லை.
ஏனெனில் அவர் தன்னுடன் பணியாற்றிய சக நண்பர்களுக்கும் தனது படங்களில் நடிக்க வாய்ப்பு கொடுத்துள்ளார். மேலும் விஜய் தொலைக்காட்சியில் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அந்நிகழ்ச்சியின் பைனல்ஸ் அல்லது துவக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கட்டாயம் பங்கு எடுத்திருக்கிறார். அதேபோல் தற்போது கலக்கப்போவது யாரு? சாம்பியன்ஸ்என்ற பைனல்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.
அப்போது காமெடி நட்சத்திரமாக இருக்கும் நாஞ்சில் விஜயன் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு சிவகார்த்திகேயனின் குணத்தை பற்றி பதிவு ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதில் ” உண்மையான ஹீரோ எவ்வளவு உயரத்திற்கு போனாலும் பழைய நண்பர்களையும் பழகியவர்களையும் மறக்காமல் தொடர்ந்து கவனித்து அன்பு பாராட்டும் டான்
தன் திறமையை மூலதனமாக வைத்து உழைத்துக்கொண்டே இருந்தால் வாழ்வில் உச்சத்தை அடையலாம் என்று முன்னேற துடிக்கிற பல இளைகர்களுக்கு ரோல் மாடலாக இருக்கும் சீமராஜா, மக்களை மகிழ்விப்பதில் இவர் எப்போதுமே ஒரு டாக்டர், ஐ லவ் யூ சோ மச் ப்ரோ நீங்கள் தான் எங்கள் இன்ஸ்ப்ரேஷன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram