Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து விலகிய பிரபலம் யார் தெரியுமா..?

Vijay tv BB Jodigal Season 2 Update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ் ஜோடிகள். இந்த நிகழ்ச்சி பிக்பாஸ் பிரபலங்கள் ஜோடி சேர்ந்து நடனம் ஆடினர். வனிதா சுரேஷ் சக்கரவர்த்தியுடன் இணைந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

ஒரு கட்டத்தில் நடிகர்களுடன் வாக்குவாதம் செய்து இந்த நிகழ்ச்சியிலிருந்து விலகிக் கொண்டார். இந்த நிலையில் விரைவில் இந்த நிகழ்ச்சி இரண்டாவது சீசன் ஒளிபரப்பாக உள்ளது. போட்டியாளர்களாக பங்கேற்க போவது யார் யார் என்பது குறித்த அறிவிப்புகள் வெளியாகிவிட்டன.

இந்த நிகழ்ச்சியில் கடந்த சீசனில் நடுவராக பங்கேற்ற நகுல் இந்த நிகழ்ச்சியிலிருந்து விலகிக் கொண்டு உள்ளார். அவருக்கு பதிலாக பீஸ்ட் படத்தில் நடித்திருந்த டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இந்த சீசனில் நடிகராக பங்கேற்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Vijay tv BB Jodigal Season 2 Update
Vijay tv BB Jodigal Season 2 Update