Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“விஜய் சார் பற்றி பேச எனக்கு தகுதி இல்லை”: விஜய்டிவி பாலா

vijay tv bala-speech-goes-viral

சின்னத்திரையில் தனது காமெடியால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் பாலா. ‘கலக்கப்போவது யாரு’ எனும் நிகழ்ச்சி மூலம் திரையுலகிற்கு அறிமுகமான பாலா ‘குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றார். தொடர்ந்து பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பல குழந்தைகளின் படிப்பிற்கு உதவி வருகிறார். மேலும், சமூக சேவையும் செய்து வருகிறார். மருத்துவ வசதி இல்லாமல் இருக்கும் கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வழங்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல் மருத்துவத்திற்காக இலவச ஆட்டோ சேவையும் வழங்கி வருகிறார்.இந்நிலையில் நடிகர் பாலாவிடம் விஜய் கட்சி தொடங்கியது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு, \”விஜய் சார் பீக்கில் இருப்பவர், நான் வீட்டில் இருப்பவன். விஜய் சார் பற்றி பேசுவதற்கு எனக்கு தகுதி இல்லை. அரசியலில் சேரும் அளவிற்கு நான் பெரிய ஆள் இல்லை. எனக்கு பதவி ஆசை இல்லை. அந்த அளவிற்கு மூளையும் இல்லை. எனக்கு சேவை மட்டும் போதும். அரசியலில் தாக்கு பிடிக்கும் அளவிற்கு எனக்கு அறிவு இல்லை. நான் பத்து ஆம்புலன்ஸ் தருவதாக கூறினேன், அதில் ஐந்து முடித்துவிட்டேன் மீதியையும் கொடுத்துவிடுவேன். இது முடித்துவிட்டு இன்னொரு இலக்கு இருக்கிறது அதை நோக்கி பயணிப்பேன். இதில் எந்த விதமான அரசியல் நோக்கம் இல்லை, அன்பின் ஏக்கம் மட்டுமே இருக்கிறது\” என்று கூறினார்.

vijay tv bala-speech-goes-viral
vijay tv bala-speech-goes-viral