Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

டேஞ்சர் சோனில் நிக்சன். விஜய் டிவி எடுத்த முடிவு. உங்கள் கருத்து என்ன?

vijay-tv-announcement-about-12th-elimination update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதன் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து 11 பேர் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள போட்டியாளர்களில் இந்த வாரம் பட்டியலில் அர்ச்சனா, விசித்ரா, தினேஷ், மணி சந்திரா மற்றும் நிக்சன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இவர்களில் ஆரம்பத்தில் நிக்சன் மற்றும் விசித்ரா குறைவான ஓட்டுக்களுடன் கடைசி இரண்டு இடங்களில் இருந்தாலும் அதன்பிறகு விசித்ரா இரண்டாவது இடத்திற்கு வந்துவிட மணிச்சந்திரா மற்றும் நிக்சன் ஆகியோர் டேஞ்சர் சோனில் இருந்து வந்தனர்.

மிக மிக குறைந்த ஓட்டுக்களை பெற்ற நிக்சன் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுவார் என ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு காத்திருக்க நேற்று மாலை மிக்ஜாங் புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளால் பலரால் ஓட்டு போட முடியவில்லை. ஆகையால் இந்த வாரம் எலிமினேஷன் ரத்து செய்யப்படுகிறது என அறிவிப்பு வெளியிட்டது விஜய் டிவி.

இதைப் பார்த்த பலரும் நிக்சனை காப்பாற்ற தான் இந்த ஏற்பாடு என விஜய் டிவியை வசை பாடி வருகின்றனர். சென்னையில் மட்டும் தானே புயல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை வாசிகள் மட்டும் தான் ஓட்டு போடுகிறார்களா? தமிழகத்தில் சென்னை மட்டும்தான் இருக்கிறதா? என பலவிதமாக கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

வெளியேறும் தருவாயில் இருந்த நிக்சனை காப்பாற்ற தான் இந்த நோ எலிமினேஷன் அறிவிப்பு என விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த அறிவிப்பு பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

vijay-tv-announcement-about-12th-elimination update
vijay-tv-announcement-about-12th-elimination update