திரைப்படங்களைக் காட்டிலும், அதிரடியான, திரில்லரான, சஸ்பென்ஸ் நிறைந்த வெப் தொடர்களில் நடிக்கவே பல நடிகர்களும், நடிகைகளும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
முன்னணி நடிகைகளான காஜல் அகர்வால், தமன்னா, சமந்தா, நித்யாமேனன், பிரியா பவானி சங்கர், பிரியாமணி ஆகியோரும் வெப் தொடர்களில் நடிக்கிறார்கள். பிரசன்னா, பரத், பாபி சிம்ஹா, மீனா ஆகியோர் ஏற்கனவே வெப் தொடர்களில் நடித்துள்ளனர்.
அந்தவகையில், தமிழ் திரையுலகின் பிஸியான நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி வெப் தொடரில் அறிமுகமாக உள்ளதாக சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். இதற்கான ஆரம்பக்கட்டத்தில் இருப்பதாக கூறிய அவர், அந்த வெப் தொடரை யார் இயக்கப்போவது என்பதை தெரிவிக்கவில்லை.
அந்த வெப் தொடரை 96 படத்தின் இயக்குனர் பிரேம் குமார் இயக்க வாய்ப்புள்ளதாக சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெற்றோரைப் போலவே காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் கவினுக்கு காதல் கைகூடாததால், வீட்டில் பெண்…
Loser Song Lyric Video | I'm Game(Tamil) | Dulquer Salmaan | Benny Dayal, Jakes Bejoy,…
Immortal Official Trailer | GV Prakash | Kayadu Lohar | Sam CS | Mariyappan Chinna…
Operation Tral Official Teaser Tamil | Jayasurya | Ritika Singh | Ratheesh Vega | Joby…
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் அஸ்வத் மாரிமுத்து, நடிகரும் தமிழக முதலமைச்சருமான விஜய்யின் வாழ்க்கை வரலாற்றை…
தமிழ் சின்னத்திரை ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘பிக்பாஸ் தமிழ்’, தனது 10வது சீசனில் அடியெடுத்து வைக்கிறது.…