நடிகர், நடிகைகள் பலர் கொரோனாவில் சிக்கி வருகிறார்கள். அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆரத்யா ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெறுகிறார்கள்.
பிரபல சின்னத்திரை நடிகை நவ்யா சாமி, நடிகர் ரவிகிருஷ்ணா ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில் பிரபல நடிகை ராச்சல் ஒயிட்டுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இவர் அஜித்குமாரின் மங்காத்தா படத்தில் சிறிய வேடத்தில் நடித்து இருந்தார். இம்ரான் ஹாஸ்மி, கங்கனா ரணாவத் ஆகியோர் நடித்துள்ள உங்க்லி படத்திலும் நடித்து இருக்கிறார். வங்காள மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
பிரபல இந்தி இயக்குனர் சஜித் நதியத்வாலா மீது மீ டூ புகார் சொல்லி பரபரப்பாக பேசப்பட்டார். ராச்சல் ஒயிட் தனது டுவிட்டர் பக்கத்தில்,
“எனக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறேன். எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
சமூக வலைதளங்களில் தனது மகள்களை குறிவைத்து அவதூறு மற்றும் கேலி பதிவுகளை வெளியிடுபவர்களுக்கு நடிகை குஷ்பு சுந்தர் கடுமையாக எச்சரிக்கை…
தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக விளங்கும் பாவனா, 'ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ்' படப்பிடிப்பின் போது நடந்த மறக்க…
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வரும் 'கட்டா குஸ்தி 2' திரைப்படத்தை பார்த்துவிட்டு, சூப்பர் ஸ்டார்…
இளம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த…
உலகின் புகழ்பெற்ற டென்னிஸ் தொடரான விம்பிள்டன் 2026, இந்த ஆண்டும் விளையாட்டுடன் சேர்த்து ஃபேஷன் உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உலக…
Boomer Man Official Trailer | Ajith Gill , Karthik Kumar | THI KI | Vivek…