தென்னிந்திய திரை உலகில் டாப் ஹீரோக்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் சேதுபதி. ரசிகர்களால் மக்கள் செல்வன் என்று அன்போடு அழைக்கப்பட்டு வரும் இவர் கதாநாயகனாக மட்டுமின்றி வில்லனாகவும் பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்திலும் வில்லனாக நடித்து வரும் விஜய் சேதுபதி இப்படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து பகிர்ந்திருக்கும் தகவல் வைரலாகி வருகிறது.
அதில் அவர், ஜவான் படத்தின் படப்பிடிப்பின் துவக்கத்தில் மிகவும் பதட்டமாக உணர்ந்தேன், ஆனால் ஷாருக்கான் எனக்கான வசதியை ஏற்படுத்தி தந்தார். அவர் ரொம்ப அன்பானவர் அவருக்கான ஷூட்டிங் இல்லாத நேரத்திலும் அவர் என்னுடன் இருந்தார். நான் உண்மையில் ஷாருக்கானுடன் நன்றாக நேரம் கழித்தேன். அவர் ஒரு ஜென்டில்மேன் அவருடன் பணியாற்றிய அனுபவம் மிகவும் நன்றாக இருந்தது என்று மகிழ்ச்சியுடன் பகிர்ந்திருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.
#VijaySethupathi talking about #ShahRukhKhan sir #Jawan pic.twitter.com/PG0ddJnYJn
— Saqqu_FAN???? (@saquib_srkian) January 19, 2023