Vijay Sethupathi team up with controversial directors
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் கைவசம் லாபம், கடைசி விவசாயி, துக்ளக் தர்பார், விக்ரம், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் உள்ளன. இதுதவிர தெலுங்கு, இந்தி, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி அடுத்ததாக பாலிவுட் இயக்குனர்கள் ராஜ் மற்றும் டீகே இணைந்து இயக்கும் வெப் தொடரில் நடிக்க உள்ளார். இதுதவிர ராஜ் மற்றும் டீகே தயாரிக்கும் புதிய திரைப்படத்திலும் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். இந்த திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷனும் நடிக்க உள்ளார்.
இயக்குனர்கள் ராஜ் மற்றும் டீகே, அண்மையில் சமந்தா நடிப்பில் வெளியான ‘தி பேமிலி மேன் 2’ வெப்தொடரை இயக்கி இருந்தனர். ஈழத்தமிழர் விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றிருந்ததால் இந்த வெப் தொடருக்கு எதிர்ப்பு எழுந்தது குறிப்பிடத்தக்கது. சர்ச்சை இயக்குனர்களின் இயக்கத்தில் வெப் தொடர், தயாரிப்பில் ஒரு படம் என நடிகர் விஜய் சேதுபதி அடுத்தடுத்து நடிப்பது தமிழ் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Pattampoochi Lyric Video | Vishwanath and Sons | Suriya, Mamitha Baiju | G.V. Prakash |…
Magaraasi Video Song | Gatta Kusthi 2 | Vishnu Vishal | Zara Zyanna | Chella…
I,Nobody Trailer - Tamil | Prithviraj Sukumaran| Parvathy Thiruvothu| Nisam Basheer| Jakes Bejoy
Veera Veera Lyric Video | Angikaaram | KJR | Thenpathiyan | Ghibran | Swastik Visions
பிக்பாஸ் சீசன் 5 வெற்றியாளரும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவருமான ராஜு ஜெயமோகன், தற்போது…
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது அடுத்தடுத்த திரைப்படத் திட்டங்களால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார். சமீபத்தில், மதுரையை பின்னணியாகக் கொண்டு புதுமுகங்கள்…