Categories: NewsTamil News

கிரிக்கெட் பார்த்ததே இல்லை… முரளிதரனாக நடிக்க சம்மதித்தது ஏன்? – விஜய்சேதுபதி விளக்கம்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். டெஸ்ட் அரங்கில் முதன் முறையாக 800 விக்கெட்டுகளை கைப்பற்றியவர் முரளிதரன். இதனால் இந்த படத்திற்கு 800 என பெயரிடப்பட்டுள்ளது.

எம் எஸ் ஸ்ரீபதி எழுதி இயக்குகிறார். தமிழில் உருவாகும் இந்த படத்தை, தார் மோ‌ஷன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, தெலுங்கு நடிகர் ராணா டகுபதி தயாரிக்க உள்ளார்.

இந்த படம் குறித்து விஜய் சேதுபதி சமீபத்திய பேட்டியில் கூறியதாவது: நான் சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் பார்த்ததில்லை. இதை நான் முத்தையா முரளிதரன் அவர்களிடம் கூட கூறினேன், அதற்கு அவர், இந்த படத்தில் நடிக்க சரியான தகுதி இதுதான் என சொன்னார்.

மேலும் இப்படத்திற்காக உடல் எடையை குறைக்க உள்ளதாகவும், ஆனால் அது சற்று கடினமாக இருப்பதாகவும் விஜய் சேதுபதி கூறியுள்ளார்.

admin

Recent Posts

பெண் வீட்டார் எடுத்த முடிவு.. சந்தோஷத்தில் மனோஜ் விஜயா.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

பெண் வீட்டாரிடம் மனோஜ் குறித்த உண்மையை கூறியுள்ளார் அண்ணாமலை. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…

35 minutes ago

முதல் படம் அனுபவம் குறித்து நேர்காணலில் பகிர்ந்து கொண்ட பிரியங்கா சோப்ரா.. யாரைப் பற்றி சொல்லியிருக்கிறார் பாருங்கள்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக…

17 hours ago

Heartin Teaser

https://youtu.be/N7kX6kLi-kQ?si=pKemvlWqjskeYDkV

17 hours ago

Thuru Thuru – Lyrical video

https://youtu.be/PWRE1SAnn8I?si=OcGj3Y6JNKzAG2gr

18 hours ago

விளாத்திகுளம் விவகாரம் குறித்து ஆதங்கத்தை கொட்டி தீர்த்த பிக் பாஸ் முத்துக்குமரன்..!

தமிழ் சின்னத்திரையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் முத்துக்குமரன் இவர் எட்டாவது சீசனின் பங்கேற்று டைட்டிலையும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.…

18 hours ago

சுரேகாவிற்கு ஆறுதல் சொல்லும் மாதவி, நந்தினி சொன்ன வார்த்தை, மூன்று முடிச்சு சீரியல் எபிசோடு அப்டேட்..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

18 hours ago